2025 மே 19, திங்கட்கிழமை

டிப்பர் மோதி சிறுமி உயிரிழப்பு; சாரதி கைது

எப். முபாரக்   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - கண்டி பிரதான வீதியின், கல்ஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதரஸ்கொட்டுவப் பகுதியில், டிப்பர் வாகனமொன்று மோதியதில், 09 வயதுச் சிறுமி ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று  (30) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், அதே பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.பிரியங்கிக்கா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சிறுமி, வீதியைக் கடக்க முற்பட்ட வேளை வேகமாக வந்த  டிப்பர் வாகனம் சிறுமியை மோதித்தள்ளியமையாலேயே, சிறுமி உயிரிழந்துள்ளாரெனத் தெரியவருகின்றது.

சிறுமியின் சடலம், கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதோடு, உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, டிப்பர் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதோடு, அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X