Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 07, புதன்கிழமை
Editorial / 2022 மார்ச் 10 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை - தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக டீசல் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு காரணமாக, இப்பிரதேசத்தில் அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஒரு மாதத்துக்கு முன்னர் மழையை நம்பிய நெற்செய்கை அறுவடையின் போது ஏக்கர் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வழங்கி நிலையில், தற்போது 9,000 ரூபாய் வழங்கி அறுவடை செய்வதால் அதிக நட்டத்தை எதிர்நோக்க நேரிடுவதாகவும் விளைச்சல் ஏக்கருக்கு 20 மூட்டைகளுக்கும் குறைவாகவே கிடைப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமன்றி வயல் உரிமையாளர்களிடமே டீசலை பெற்றுவருமாறும் அறுவடை உரிமையாளர்கள் தெரிவிப்பதால், தோப்பூர் பிரதேசத்திலிருந்து பல கிலோமீற்றர் தொலைவிலுள்ள மூதூர் மற்றும் சேருநுவர பிரதேசங்களுக்குச் சென்று டீசல் பெறுவதற்காக சிரமப்படுவதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago