Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடைக்குத் தேவையான டீசல் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முறைமைப்படுத்தப்பட்ட திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்டச் செயலாளர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்தில் நேற்று (17) மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவட்டத்தில் மொரவெவ, கோமரங்கடவெல, பதவிசிறீபுர ஆகிய பிரிவுகளில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
விவசாயிகளுக்கு அறுவடைக்கான டீசல் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 லீற்றர் என்றவாறு சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் கிரமமாக வழங்கப்பட்டு வருகின்றன.
மாவட்டச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, பிரதேச செயலாளர்கள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் இச்செயற்பாட்டை ஒருங்கிணைத்து செயற்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் விதைப்பு நடவடிக்கள் பிந்தி ஆரம்பிக்கப்பட்ட பிரதேசங்களில் நெல் அறுவடை தற்போது தொடக்கம் செப்டெம்பர் மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் கூடுதலாக நடைபெறும் என்பதனால் அதற்கான எரிபொருளை கிரமமான முறையில் விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, விவசாய சங்க பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளரின் கவனத்துக்கு மாவட்டச் செயலாளர் கொண்டுவந்தனர்.
விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காலப்பகுதியை அடிப்படையாக கொண்டு, அறுவடைக்கான டீசல் தேவைப்பாடு தொடர்பான பட்டியல் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
அப்பட்டியலிற்கேற்ப விவசாயிகளுக்கு டீசல் வழங்கும் செயற்பாடு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்செயற்பாடு துரிதப்படுத்தப்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெல் அறுவடைக்காக கொண்டுவரப்படும் டீசல் முற்றாக விவசாயகளுக்கே விநியோகிக்கப்படும். அது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மேற்பார்வை செய்யுமாறு, மாவட்டச் செயலாளர் இதன்போது வேண்டிக்கொண்டார்.
31 minute ago
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
43 minute ago
50 minute ago