2025 மே 13, செவ்வாய்க்கிழமை

டெங்கின் வீரியம் அதிகரிப்பு

Freelancer   / 2022 மே 22 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்,ஹஸ்பர்

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் தாக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இந்த வருடம் 770 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

 இதில் திருகோணமலை கடற் படை தளத்தில் 111 நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். 

திருகோணமலையில் உள்ள சுகாதார பணிமனையில் நேற்று (21) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் 

டெங்கு வீரியம் அதிகரிப்பு உயர் சிவப்பு வலயங்களாக திருகோணமலை, கிண்ணியா, மூதூர், உப்புவெளி, குச்சவெளி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இனங்காணப்பட்டுள்ளன. 

திருகோணமலை பகுதியில் 203 நோயாளர்களும், மூதூரில் 203, கிண்ணியா 77,உப்புவெளி 76 என டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறான கொடிய நோயிலிருந்து பாதுகாக்க பொது மக்கள் அவதானமாக செயற்படவும் தங்களது வீடுகள் காணிகளை சுத்தமாக வைத்திருக்கவும் பாவிக்காத மலசல கூடங்களை கவனமாக நீர்தேங்காத வண்ணம் சுத்தப்படுத்துவதுடன் வெற்றுக் காணிகளையும் உரிய நேரத்தினுல் சுத்தமாக பேணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அது போன்று பாடசாலைகள் அரச திணைக்களங்களில் தினசரி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சுத்தத்தை பேண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், காய்ச்சல் ஏற்படுமிடத்து உடனடியாக வைத்தியரை நாடவும் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதில்  மக்கள் அவதானமாக செயற்படவும் மீண்டும்   சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாது உடன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X