2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

டைனமைட்டுடன் ஆயுர்வேத வைத்தியர் கைது

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம், கீத், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர், நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர் என திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். 

அண்ணல் நகர், கிண்ணியா-3 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான ஆயுர்வேத வைத்தியரும் ஜாவா நகர், கிண்ணியா-6 ஜ சேர்ந்த 41 வயதான மீனவர் ஒருவருமே டைனமைட்டுடன் கைதானதாகவும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சிகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும்  கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலை கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்படி மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த தலைமையகப் பொலிஸார், அதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X