2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

டெங்கொழிப்புக்காக கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2017 மார்ச் 23 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக கிழக்கு மாகாணத்திலுள்ள  உள்ளூராட்சி மன்றங்களுக்கு  நிதி உதவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா பணித்துள்ளார்.

இம்மாகாணத்திலுள்ள  45 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் நிதி உதவியை  வழங்குமாறும் தனது செயலாளருக்கு அமைச்சர் பணித்துள்ளார்.  

உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, கைத்தொழில் மற்றும் வாணிப  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கும்; கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும் இடையிலான கலந்துரையாடல்,  முதலமைச்சரின்  அலுவலகத்தில் புதன்கிழமை (22) மாலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,

இதன்போது, டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் விளக்கமளித்தார். அத்துடன், உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் ஆளணி, வாகனங்கள் மற்றும் உபகரணங்களுக்கானப் பற்றாக்குறை ஆகியவை தொடர்பிலும்  முதலமைச்சர் தெரியப்படுத்தினார்.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேற்படி நிதி உதவியை வழங்குவதற்கு அமைச்சர் பணித்துள்ளார். இந்த நிதி உதவியானது கிழக்கு மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேலும் முன்னெடுப்பதற்கு ஏதுவாக அமையும் என மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X