Editorial / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
மூதூர், தக்வா நகர் பிரதேசத்தில் பல வருடமாக இயங்கி வந்த கடற்படை முகாமை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தமாக கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் சுமித் வீரசிங்கவை, அவரது திருகோணமலை அலுவலகத்தில் வைத்து, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், இன்று (13) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது எனடுக்கப்பட்ட பரஸ்பரத் தீர்மானங்களுக்கு அமைய, உடனடியாக இது குறித்து பரீசிலனை செய்து, நடவடிக்கை எடுப்பதாக, கிழக்கு மாகாண கடற்படை கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்னும் ஓரிரு தினங்களில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உரிய இடத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .