Princiya Dixci / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எப்.முபாரக்
திருகோணமலை, சாம்பல்தீவு பகுதியில் வீதியில் சென்ற இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளால் பேசி பகிடிவதை செய்த இருவரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே, இன்று திங்கட்கிழமை (14) உத்தரவிட்டார்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு, பாளையூற்று பகுதியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார் (வயது 31), கே.பி.சமந்தா (வயது 23)ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இளம் பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) வீதியால் சென்ற வேளை குறித்த சந்தேகநபர்கள் இருவரும் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் பகிடிவதை செய்ததாக பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் செய்த முறைப்பாட்டையடுத்து இவ்விருவரும் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரையும், திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
31 minute ago