எப். முபாரக் / 2018 மார்ச் 17 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருபத்தைந்து பவுன் தங்கத்தைக் கொள்ளையிட்ட நபரொருவரை, இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.
விக்டோரி விளையாட்டு மைதானம்,டீன் வீதி,காத்தான்குடி 06, பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், காத்தான்குடி பகுதியிலிருந்து திருகோணமலை நகரில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையிலே, திருகோணமலை நகரில் உள்ள வீடொன்றில் இருபத்தைந்து பவுன் தங்கத்தைக் கொள்ளையிட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பாக திருகோணமலை குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்துள்ளாரென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை,இக்கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும், திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
51 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago