Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலையில் ஒன்றறை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடி 49,000ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்த இளைஞரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை(09) உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை டோக்கியாட் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய ஒன்றறை பவுன் தங்கச் சங்கிலியை 49,000ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்டபோதே திருகோணமலை பொலிஸார் குறித்த இளைஞனை செவ்வாய்க்கிழமை(08)கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் டி.சரவணராசா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
11 minute ago
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
30 minute ago