Princiya Dixci / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்து ஐந்து பவுன் தங்கச்சங்கிலியைத் திருடிய 24 வயதுடைய இளைஞனை, இன்று வியாழக்கிழமை (10) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பகுதியிலுள்ள வீட்டொன்றில் யாருமற்ற சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி குறித்த சந்தேகநபர், ஐந்து பவுன் தங்கச்சங்கிலியைத் திருடியுள்ளதாகவும் தங்கச்சங்கிலியின் உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கிணங்ஙக இவரைக் கைது செய்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
10 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
29 minute ago