எப். முபாரக் / 2018 ஜனவரி 14 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்திருந்த ஒருவரை, இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் நேற்று(13) உத்தரவிட்டார்.
இக்பால் நகர், நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று(13) அதிகாலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, சந்தேகநபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
40 minute ago