Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 22 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம்
மூதூர் தேர்தல் தொகுதியில், தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய கொட்டியாரப்பற்று என்ற தனியான தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்கப்பட வேண்டுமென, தமிழ் மக்கள் கூட்டணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சி.நந்தகுமார் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிர்வாக ரீதியில் திருகோணமலை மாவட்டமானது கிழக்கு மாகாணத்துக்கு உரியதெனவும் திருகோணமலை மாவட்டம் 11 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி உள்ளதோடு, 230 கிராம அலுவலர் பிரிவுகளையும் 645 கிராமங்களையும் கொண்டுள்ளது நிலப்பரப்ப அடிப்படையில் திருக்கோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்பரப்பை விட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் நிலப்பரப்பு அதிகமாகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மேலும் தற்போது உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்ளடங்கம் தமிழ் கிராமங்கள் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் காட்டி அபிவிருத்தியில் புரக்கணிக்கப்பட்டே வந்தது.
“அத்தோடு, மூதூர் பிரதேச செயளாலர் பிரிவின் உள்ள தமிழ்க்கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதியும் இந் மக்களின் வாழ்க்கைத்தரமும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே எதிர்காலத்தில் இத் தமிழ் கிராமங்களின் நன்மை கருதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் உள்ளடங்கும் தமிழ் கிராமங்களை உள்ளடக்கி கொட்டியாரப்பற்று என்னும் தமிழ்பிரதேச செயலாளர் பிரிவொன்றை தனியாக புதிதாக ஸ்தாபிக்கப்பட வேண்டுமென, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago