Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தின் விவசாயத்துறையில் நவீன திட்டங்களை அறிமுகப்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்ற வேண்டுமென்பதே தனது நோக்கமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் பங்கேற்கும் தேசிய உணவு உற்பத்தித்திட்ட செயலமர்வு, மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் தலைமையில் முதலமைச்சரின் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுவரும் தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாகாணங்களும் எடுத்துவரும் திட்டங்கள் பற்றிய விடயங்கள் தொடர்பிலும் இச்செயலமர்வில் ஆராயப்பட்டன.

12 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
31 minute ago