2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தம்பலகாமப் படுகொலை: 20ஆவது ஆண்டு நினைவு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்பலகாமப் படுகொலையின் 20ஆவது ஆண்டு நிறைவு நினைவேந்தல், நேற்று (01) மாலை 6 மணிக்கு இடம்பெற்றது.

தம்பலகாமத்தில், 1998ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி, பொலிஸாரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின் 20ஆவது ஆண்டு நிறைவு நினைவேந்தலே, நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செ. கயேந்திரன், திருகோணமலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்  பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கைவிடப்பட்டிருந்த இடுகாட்டின் தூபிகள் புனர்நிர்மாணிக்கப்பட்டு, இந்நினைவேந்தலை நடத்துவதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கைகளை எடத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X