Suganthini Ratnam / 2016 ஜனவரி 31 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் 2016ஆம் ஆண்டுக்கான தமிழ்மொழித் தினப் போட்டிகள் நடைபெறும் தினங்கள் தொடர்பில் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் சுற்றுநிருபம் அனுப்பியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, '2016ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட தமிழ்மொழித் தினப் போட்டிக்கான மாவட்ட மட்ட விண்ணப்பங்கள்; 12.04.2016 முன்னர் மாகாண கல்வித் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இதற்கிணங்க, வலய மட்டப் போட்டிகள் 2016.03.10ஆம் திகதிக்கு முன்னரும் மாவட்ட மட்ட எழுத்தாக்கப் போட்டிகள் 2016.03.19ஆம் திகதிக்கு முன்னரும் அந்தந்த மாவட்டங்களில்; நடைபெறும். கடந்த வருடம் போல் மாவட்ட மட்ட எழுத்தாக்கப் போட்டிகளை மாகாணக் கல்வித் திணைக்களம் நடத்தும்.
மாவட்ட மட்ட ஏனைய போட்டிகள் 2016.04.10ஆம் திகதிக்கு முன்னரும் மாகாண நிலை எழுத்தாக்கப் போட்டிகள் 28.04.2016 அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.
எழுத்தாக்கம் தவிர்ந்த ஏனைய மாகாண நிலை போட்டிகள் 07.05.2016, 14.05.2016ஆம் திகதிகளில் போட்டி இலக்கம் 15 வாசிப்புத் தொடக்கம் போட்டி இலக்கம் 28 இசையும் அசைவும் வரையான 14 போட்டிகள் நடைபெறும்.
14.05.2016ஆம் திகதி போட்டி இலக்கம் 29 இசை தனி தொடக்கம் போட்டி இலக்கம் 46 முஸ்லிம் நிகழ்ச்சி வரையான 17 நிகழ்சிகள் நடைபெறும். போட்டிகள் நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago