2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘தற்கொலைகளை கட்டுப்படுத்த பொறிமுறை தேவை’

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

அதிகரித்துவரும் இளம் தற்கொலைகளை கட்டுப்படுத்துவதற்கு சரியான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் அண்மைக்காலமாக தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

“குறிப்பாக, கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகி மாணவர்களும், சிறு சிறு குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளாகி இளைஞர்களும் யுவதிகளும் தற்கொலை செய்து வருகின்றார்கள்.

“இவர்களை பாதுகாக்கும் முகமாக, சரியான பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

“உலக வங்கியின் அபிவிருத்தி குறிகாட்டிகளின்படி, இலங்கையின் தற்கொலை இறப்பு ஒரு இலட்சம் பேருக்கு 14 பேர் என்ற விகிதத்தில் காணப்படுகின்றது. அத்துடன், 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மனநல கோளாறின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் இவர்களில் 73 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“யுத்த காலத்தில் இறந்தவர்களைவிட தற்கொலையின் காரணமாக சம்பவிக்கின்ற இறப்புக்கள் அதிகரித்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

“எனவே, பாடசாலை ரீதியாக மனவள நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து, உள ரீதியாக வலுவான மாணவர் சமுதாயத்தை உருவாக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X