2025 மே 05, திங்கட்கிழமை

திருகோணமலையிலும் பிரித்தானிய வைரஸ்

Princiya Dixci   / 2021 மே 11 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

பிரித்தானியாவில் பரவும் B.1.1.7 என்ற உரு திரிபடைந்த கொரோனா வைரஸ் திருகோணமலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கந்தளாய், சீனக்குடா மற்றும் உப்புவெளி  பிரதேசங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகளைப் பெற்று, அதனை கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வு கூடத்துக்கு திருகோணமலை தொற்றுநோயியல்  பிரிவு அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை 520 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 42 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை 20  மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வைத்தியசாலைகளிலும் 240 கட்டில்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மூன்று வைத்தியசாலைகளைத் தெரிவுசெய்து வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X