Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 19 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியக் கடற்படைக் கப்பலான பற்றி மால் திருகோணமலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது, இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரியத்துக்கு அமைவாக இக்கப்பலுக்கு மனப்பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2. இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக இந்தியக் கடற்படைக்கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் ரியர் அட்மிரல் மன் சிங் எம் அவர்கள் கிழக்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் HGUD குமாரவை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
2023 ஜூன் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் சர்வதேச யோகா தின முன்னோட்ட நிகழ்வாக விசேட யோகா அமர்வும் பல்வேறு அம்சங்களுடனான ஏனைய பல நிகழ்வுகளும் இக்கப்பலின்
விஜயத்தின்போது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3. அத்துடன், தென் மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுடனான சமூக ரீதியான உரையாடல்கள் இடம்பெற்றதுடன் கல்வித் தரத்தினை உயர்த்தும் நோக்குடன் உதவிகளும்
வழங்கப்பட்டன. இவற்றின் நிறைவில் திருகோணமலையிலிருந்து புறப்பட்ட இக்கப்பல், 2023 மே 17 ஆம் திகதி திருகோணமலைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான
ரணதீர கப்பலுடன் PASSEX பயிற்சிகளில் பங்கேற்றிருந்தது.
4. பிராந்தியத்தின் பொதுவான கடல்சார் பாதுகாப்பு சவால்களை இவ்வாறான அதிவேக ரோந்து கலங்கள் மூலம் வினைத்திறன் மிக்க வகையில் இலங்கை கடற்படையினர் எதிர்கொள்வதற்கான திறன்களை மேலும் வலுவாக்குவதற்காக இந்தியா இலங்கை இடையில் காணப்படும் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் என்ற அடிப்படையில் அதிவேக ரோந்துக்கப்பலான இந்தியாவின் பற்றி மாலின் இலங்கை விஜயமானது மிகவும் முக்கியத்துவமிக்கதாக அமைகின்றது.
5. இதேவேளை SLINEX-23இல் பங்கேற்பதற்காக இந்திய கடற்படை கப்பல்களான கில்தான் மற்றும் சாவித்ரி ஆகியவை 2023 ஏப்ரல் 03-06 காலப்பகுதியில் கொழும்புக்கு வருகை தந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இரு அயல் நாடுகளினதும் கடற்படையினர் இடையிலான இயங்குதிறன் மற்றும் தோழமையினை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டே இந்தியக் கடற்படைக் கப்பல்களின் இலங்கை விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. R
48 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
51 minute ago
1 hours ago