2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2021 டிசெம்பர் 22 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், எஸ்.எம்.றனீஸ்

திருகோணமலை கரையை அண்டிய பகுதியில் தூண்டில் மற்றும் சிறு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யும்  மீனவர்கள், திருகோணமலை மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இன்று (22) காலை கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேறுபகுதி மீனவர்கள் வருகைதந்து திருகோணமலை கரையோரங்களில் சட்டவிரோதமாக பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதால் கரையை அண்டிய பகுதியில் தூண்டில்களையும், சிறிய வலைகளையும் பயன்படுத்தி மீன்பிடிக்கும் தமது தொழிலும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கரைகளில் மீன்பிடியில் ஈடுபடுவோரை தடை செய்ய வேண்டுமெனவும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் அவர்கள் மீன்பிடிப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

இதன்பின் ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், மீனவர்களோடு கலந்துரையாடி ஆர்ப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X