2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலை

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 ஜனவரி 14 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலையின் முதலாவது முஸ்லிம் பெண்கள் தேசிய பாடசாலையாக, கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம்  தரமுயர்த்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கல்வியமைச்சில் இன்று (14)  காலை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், திருகோணமலை பாடசாலையொன்றில் அண்மையில் ஏற்பட்ட அபாயாப் பிரச்சினை, தேசிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களை அடுத்து, திருகோணமலையில் முஸ்லிம் பெண்கள் பாடசாலை ஒன்றை, தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்த வேண்டுமென்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராகத் தான் இருந்தபோது, மேற்படி பாடசாலையைத் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்த மேற்கொண்ட முயற்சியால் தற்போது இந்தப் பாடசாலையை கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுவிப்பதற்கான அனுமதியை ஆளுநர் வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, இன்னும் சில நாள்களில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயம் , மத்திய அரசில் உள்வாங்கப்பட்டு, தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள், கல்வியமைச்சால் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X