வடமலை ராஜ்குமார் / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரேலோ) இன் பொதுக்குழுக் கூட்டம், திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நாளை (16) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளதாக, ரெலோவின் நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவித்தார்.
ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில், இக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வட, கிழக்கில் இருந்து 257 பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
வட, கிழக்கு விடயங்கள் உட்பட ஜெனிவா கூட்டத் தொடர் , புதிய அரசமைப்பு விடயங்கள், அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளதாக, நித்தி மாஸ்டர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .