Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
எப். முபாரக் / 2018 பெப்ரவரி 10 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கும், திருகோணமலை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதான அமைப்பாளர் ஒருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், கந்தளாய் அல்தாரிக் வாக்களிப்பு நிலையத்துக்கு அருகாமையில் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது.
கந்தளாய் பிரதேச சபைக்கு, ஐக்கிய தேசிய கட்சி பேராறு கிழக்கு 10ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேற்பாளர் ஒருவர் வீதியில் நின்ற வேளையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரதான அமைப்பாளர், ஆதரவாளர்களை வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கூறிய வேளையில், வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரச்சினைகள் ஏற்படாதவாறு சுமுகமான முறையில் பிரதேச பொதுமக்களால்தீர்த்து வைக்கப்பட்டதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago