2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருகோணமலையில் 1,911 குடும்பங்கள் பாதிப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை மாவட்டத்தில் பெய்த கன மழை காராணமாக 1,911 குடும்பங்களைச் சேர்ந்த 6,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என  திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

இவர்களுள் அதிகபட்சமாக பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 1,104 குடும்பங்களைச் சேர்ந்த 3,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

1,380 குடும்பங்களைச் சேர்ந்த 4,829 பேர் உறவினர் வீடுகளில் தங்கியிருந்ததுடன், 4 வீடுகள் முழுமையாகவும் 43 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட வீடுகளது இழப்புக்கள் பிரதேச செயலகம் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு, உரிய அமைச்சின் கவனத்துக்குக்  கொண்டுவரப்படவுள்ளதாகவும் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட வீட்டு உடமையாளர்களுக்கு 10,000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X