2025 மே 15, வியாழக்கிழமை

திருகோணமலையில் 12 மணி நேர நீர்வெட்டு

Princiya Dixci   / 2021 ஜூலை 14 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தில் நாளை (15) காலை 08 மணி முதல் இரவு 08 மணி வரையான 12 மணி நேரம் குழாய் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர பிரதான நீர் குழாய் திருத்த வேலை காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் எஸ்.ஜெயந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை - கண்டி பிரதான வீதி, முள்ளிப்பொத்தானை பகுதியில் உள்ள பிரதான குழாய் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு மூலமான நீர்க் கசிவு ஏற்பட்டதை அடுத்து திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் துண்டிக்கப்படுtதாகவும் அவர் தெரிவித்தார்.  

இதன்படி, கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை நகர், நிலாவெளி, ஆண்டாங்குளம், பாலைஊற்று மற்றும் சீனக்குடா ஆகிய பகுதிகளில் நீர் துண்டிக்கப்படும் எனவும் இதனால் நீரை சேமித்து வைக்குமாறும் பிராந்திய முகாமையாளர், பொதுமக்களைக் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .