2025 மே 05, திங்கட்கிழமை

திருகோணமலை நகரசபையின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்

வடமலை ராஜ்குமார்   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், 22 பேரின் ஆதரவுடன் இன்று (13) நிறைவேற்றப்பட்டது.

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் தலைவர் நா.இராஜநாயகத்தின் தலைமையில் பதீட்டுக்கான விசேட கூட்டம், இன்று நடைபெற்ற போது, சபையின் உறுப்பினர்கள் 24 பேரில் 23 பேர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, சபையின் எதிர்வருகின்ற 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட அறிக்கை, தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் மொத்த பெறுகை 302.8 மில்லியன் ரூபாயாகவும், மொத்த செலவீனம் 302 மில்லியன் 7 இலட்சத்துக்கு 93 ஆயிரம் ரூயாயாகவும் சபை நிதி சாதகம் 7,000 ரூபாயாகவும் சமர்ப்பிக்கப்பட்டது.

பல உறுப்பினர்களின் விவாதங்களும் கேள்விகளும் கோரபட்டு, சபையின் தலைவரால் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன.

பாதீட்டை, உப தலைவர் சே.சிறிஸ்கந்தராஜா முன் மொழிய, உறுப்பினர் கா.கோகுல்ராஜ் வழிமொழிந்தார்.

இதன்போது, நகரசபை எல்லைக்கு வெளியில் ஏற்படும் தீவிபத்துகளுக்கு நகரசபையின் தீயணைப்புப் பிரிவு சென்று தீயணைப்புப் பணியில் ஈடுபடுவதால் தீயணைப்புப் பிரிவுக்கு அதிக செலவீனங்கள்  காணப்படுதாகத் தெரிவித்த தமிழர் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சி.சிவகுமார், பாதீட்டுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூட்டத்துக்கு சமுகமளிக்கவில்லை. ஏனைய உறுப்பினர்கள் 22 பேர் ஆதரவு தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X