Janu / 2025 மே 28 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாநகர சபையின் மேயர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரை கட்சி முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு புதன்கிழமை (28) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
“ மாநகரசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 9 உறுப்பினர்கள் எனது தலைமையில் கூடி,ஜனநாயக முறைப்படி இந்த தீர்மானத்தை மேற்கொண்டனர். இதே போன்று மாவட்டத்தில் கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெற்ற சபைகளுக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகளுக்கும் ஜனநாயக முறைப்படி நடைபெறும் ”எனவும் தெரிவித்தார்.
எஸ்.கீதபொன்கலன்

24 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025