2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

திருகோணமலை மாவட்டத்தில் சேதனப்பசளை உற்பத்தி ஏற்பாடு

Freelancer   / 2021 ஜூன் 09 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன் வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விவசாயத் துறைக்குள், சேதனப் பசளைப் பாவனையைக் கொண்டு வருவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் “சுபீட்சத்தின் நோக்கு”கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட பசுமையான சமூக பொருளாதார கொள்கைக்கமைவாக,சேதன விவசாயத்தை ஊக்குவித்தல் தொடர்பான விசேட கூட்டம் நேற்று(8) திருகோணமலை மாவட்ட செயலகத்தில்,அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின், தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள சேதனப்பசளை உற்பத்தியாளர்களை பதிவு செய்து,அவர்களுக்கு அவசியமான தொழிநுட்ப மற்றும் ஏனைய வழிகாட்டுதல்களை வழங்கி,மாவட்டத்தின் கேள்விக் கேற்ற சேதனப்பசளையை, உள்ளூரிலே உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதே, இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.

இக்கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட விவசாய பணிப்பாளர் கே.குகதாசன்,துறைசார் திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X