2025 மே 05, திங்கட்கிழமை

திருகோணமலை மாவட்டத்தில் ’13 ஏக்கர் காணி விடுப்பு’

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ் அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில், பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காணிகளில், 13 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில், இராணுவ பாதுகாப்பு வலயங்களாக இருந்த 13 ஏக்கர் காணி, திருகோணமலை பாதுகாப்புத் தலைமையகத்தால், மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவிடம் கையளிக்கப்படவுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

காணிகளைக் கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில், நாளை(10) பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளதெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X