Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரர் கோவிலின் வருடாந்தத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலையைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் கோவிலின் பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
கோவிலின் வருடாந்தத் திருவிழா, பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி, கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தது.
எனினும் கொரோனா தொற்று அச்சத்தால், மக்களின் நலன் கருதி திருவிழாவை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைப்பதற்கு, புதன்கிழமை(1)நடைபெற்ற நம்பிக்கை பொறுப்பாளர் கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்டது.
அதற்கான பிராயச்சித்தமாக சமயத்தலைவர்கள் பக்தர்களின் ஆலோசனையின் பிரகாரம் சம்புரோட்சண யாகம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.
இதனிடையே வாழ்வாதாரமின்றி இன்னல்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 200 குடும்பங்களுக்கு, திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் உதவியுடன் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago