Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - மொரவெவ பிரதேசத்தில், குறிப்பாக ரொட்டவெவ, மிரிஸ்வெவ, மஹாதிவுல்வெவ போன்ற பகுதிகளில், இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 3 மணி வரை திருடர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமங்களில் உள்ள சில வீடுகளுக்குள் நுளையும் திருடர்கள், அங்கிருந்து தண்ணீர் நிரப்பும் பம்கள், சைக்கிள்கள் போன்றவற்றைத் திருடிச் செல்வதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.
மொரவெவ பொலிஸாரால் கடந்த காலங்களில் பாதுகாப்புக் கடமைகள் துரிதப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தற்போது இரவு நேரங்களில் நடமாடும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படுவதில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மொரவெவ பிரதேசத்தில், இரவு நேரங்களில் நடமாடும் பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்த மொரவெவ, கோமரங்கடவல பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் கூடிய கவனம் எடுக்க வேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Aug 2025
16 Aug 2025