2025 மே 14, புதன்கிழமை

திருமலையில் நடமாடும் சேவை

Editorial   / 2017 ஜூலை 15 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட், எஸ்.சசிக்குமார்

நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து நடத்தும் நடமாடும் சேவையை,   திருகோணமலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அலுவலகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம், இன்று (15)  ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் எம்.எஸ் தௌபீக் மாகாண சபை  அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும்  அமைச்சின் உயரதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மத ஸ்தலங்கள் மற்றும் பொதுமக்களுக்கான  நீர்த் தாங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நடமாடும் சேவையின்   மூலம் மாவட்டத்திலுள்ள அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்டு உரிய தீர்வைப்  பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .