Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி தலைமையில், வடக்கு நோக்கிய இரு நாள் களப் பயணம், அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.
நல்லூர் கோயில், கீரிமலை, இரணைமடுக் குளம், யாழ். கோட்டை, சிவபூமி அரும்பொருள் காட்சியகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு மேற்படி ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மூவினத்தையும் உள்ளடக்கிய நல்லிணக்கப் பயணமாக அமைந்த இந்த வடக்கு நோக்கிய களப் பயணத்தினூடாக பல்வேறு அனுபவப் பகிர்வுகளைக் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிடைத்ததாக, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கள நிலவரங்கள், சமூக, பொருளாதாரம், சுற்றுலாத் துறை தொடர்பில் கற்கக் கூடிய வாய்ப்பும் இவர்களுக்குக் கிட்டியது.
அரசியலுக்கு அப்பால் ஊடகவியலாளர்கள் பக்கச்சார்பின்றி தங்களது கடமைகளை நிறைவேற்றவும் அதனை முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை, யாழ். ஊடக மய்யத்தினருடனான சந்திப்பின் போது பகிர்ந்துகொண்டனர்.
யுத்த வெற்றியின் பின் வடக்கில் உள்ள குறிப்பாக யாழ். மாவட்டம் எவ்வாறாக உள்ளது, எதிர்காலத்தில் எவ்வாறிருக்க வேண்டும், அரசியல், பொருளாதாரம் மாற்றமடைய வேண்டும் தொடர்பான பல விடயங்கள், இந்த இரு நாள் ஊடக பயணத்தில் ஆராயப்பட்டன.
இவ்வாறான ஊடக களப் பயணங்கள், வடக்கு, கிழக்கின் சமூக நல்லிணக்கத்தே ஏற்படுத்துவதோடு, சக இனத்தவர்களுடன் பரஸ்பர புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்துவதாக, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
3 hours ago
7 hours ago
13 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
13 Aug 2025