2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருமலை மாவட்ட அரச அதிபர் பதவியேற்பு

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தரம் 1ஐச் சேர்ந்த ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன, தமது கடமைகளை, இன்று (14), மாவட்டச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையேற்க முன்னர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர், கடற்றொழில் மற்றும் மீன்பிடி அமைச்சின் மேலதிகச் செயலாளர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளையும் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .