Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 29 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம்
சமூகப் பணி டிப்ளோமாதாரிகளுக்கு திவிநெகும உத்தியோகத்தர் பதவி வழங்க கோரி கிழக்கு மாகாண தொழில்வாண்மையான சமூகப் பணியாளர் ஒன்றியம் அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
சமூகப் பணி தொடர்பான ஈராண்டு முழு நேர பாடநெறியினை பூர்த்தி செய்து விட்டு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பலர்தொழில் இன்றி பல்வேறு பிரச்சினைகளை பொருளாதார ரீதியாக எதிர்நோக்கி வருகின்றனர்கள்.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் மூலமாக இராஜகிரியவில் அமைந்துள்ள இதில் சமூகப் பணி தொடர்பான இரு வருட முழு நேர டிப்ளோமா பாடநெறியினை சமூக வலுவூட்டல்,நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனம் மூலமாக வழங்கப்படுகிறது.
இதில் பல்வேறு சமூகம் சார் தொடர்பான பாடநெறிகள் உள்ளடக்கப்படுகின்றன திவிநெகும திணைக்களம் இவ் அமைச்சிக்கு கீழே காணப்படுகிறது எனவே சமூகப் பணி டிப்ளோமாதாரிகளுக்கு திவிநெகும உத்தியோகத்தர் பதவி வழங்குமாறு சமூக வலுவூட்டல் ,நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு கிழக்கு மாகாண தொழில்வாமையான சமூகப் பணியாளர் ஒன்றியத்தினால் நேற்று (28) அனுப்பியுள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் தி.ஹரிஸ்ரன் தெரிவித்தார்.
ஏனைய அரச நிறுவனங்களில் சில டிப்ளோமாக்கள் அரச பதவிகளுக்கு குறித்த துறையின் பாடநெறிகள் உள்வாங்கப்பட்டபோதிலும் சமூக சேவைகள் திணைக்களம்,திவிநெகும திணைக்களம் ஊடாக சமூக சேவை உத்தியோகத்தர்,திவிநெகும உத்தியோகத்தர் பதவிக்கு சமூகப்பணி டிப்ளோமா உள்வாங்கப்படுவதில்லை குறித்த பாடநெறி நடாத்தும் அமைச்சின் ஊடாக இவ்வாறான பாடநெறிகள் புறக்கணிக்கப்படுவது கிழக்கு மாகாண சமூகப் பணி டிப்ளோமாதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் பெறுவது கடினமாகவுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சினால் விளையாட்டு விஞ்ஞானம் டிப்ளோமாக்கள் பாடநெறிகள் காணப்படுகிறது, விவசாய அமைச்சின் மூலமாக விவசாய டிப்ளோமாக்கள் காணப்படுகிறது குறித்த நிறுவனம் ஊடாக அரச துறையில் விளையாட்டு உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர்,குடியேற்ற உத்தியோகத்தர் என பல அரச துறை நியமனங்கள் வழங்கப்படுகிறது இருந்தபோதிலும் சமூகப் பணி தொடர்பான இருவருட டிப்ளோமாக்களை நடாத்தும் குறித்த அமைச்சு ஏன் சமூகப் பணி தொடர்பான சமூக சேவை உத்தியோகத்தர் ,திவிநெகும உத்தியோகத்தர் போன்ற பதவிகளை தங்களது அமைச்சினால் வழங்கப்படுவதில்லை இனி வரும் காலங்களில் அரச துறையில் சமூக சேவை அமைச்சினால் குறித்த பதவிகளுக்கு எவ்வித போட்டிப் பரீட்சைகள் இன்றி நேர்முகத் தேர்வின் மூலமாக திவிநெகும உத்தியோகத்தர் பதவிக்காக ஆட்சேர்ப்புச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago