Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ. அச்சுதன்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு, இரண்டாவது கட்டமாக உலர் உணவுப் பொதிகள், நேற்று திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோவில் பரிபாலன சபையினரால் வழங்கப்பட்டன.
திருகோணமலை மனையாவெளி நாகராசாவளவு பிரிவில் 25 குடும்பங்களுக்கும் திருகோணமலை நகரசபை தூய்மைப் பணியாளர்கள் 67 குடும்பங்களுக்கும், காந்தி நகர், கஸ்தூரி நகர் 25 குடும்பங்களுக்கும், லிங்க நகர் 11 குடும்பங்களுக்கும், வரோதயநகர் 25 குடும்பங்களுக்கும், இலுப்பைக்குளம் ஆத்திமோட்டை 15 குடும்பங்களுக்கும், பெரியகுளம் வள்ளுவர் கோட்டம் 10 குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
3 ஆவது கட்டமாக திருகோணமலைப் பகுதியில் 200 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளதாக, திருகோணமலை திருக்கோணேஸ்வர கோவில் பரிபாலன சபையின் தலைவர் க . அருள்சுப்பிரமணியம் தெரிவித்தார்.

9 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026