Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஏப்ரல் 17 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வெண்ணிற ஈ நோய்த் தாக்கம் காரணமாக சுமார் 5,000 ஏக்கர் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
கந்தளாய் பேராறு, பேராற்று வெளி வட்டுகச்சி, வான்எல, அக்போபுர அக்போகம, முள்ளிப்பொத்தானை மற்றும் தம்பலகாமம் போன்ற பகுதிகளில் இந்நோய் தாக்கம் வேகமாக பரவி வருவதாகவும் இதனால் பல தென்னம் தோட்டங்கள் அழிவடைந்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு வகையான கிருமி நாசினிகள் மற்றும் மருந்துகள் தெளித்தும் இதுவரைக்கும் நோய்த் தாக்கம் குறையவில்லையெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை அறிவித்த போதும் இதுவரைக்கும் குறித்த பகுதிக்குச் சென்று பாதிப்புகளை பார்வையிடவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, விவசாய அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தி, வெண்ணிற ஈ நோயைக் கட்டுப்படுத்தி தருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். (N)
1 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
6 hours ago