2025 மே 01, வியாழக்கிழமை

‘தேர்தலை இலக்காகக்கொண்டு, தொழிற்சங்கங்கப் போராட்டங்கள்’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், தீஷான் அஹமட்

தேர்தலை இலக்காகக்கொண்டு, மஹிந்த சார்புத் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றன என, ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

இன்று (19) காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாடு முழுவதும் பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன எனவும் இந்தப் போராட்டங்களின் பின்னணியில் மஹிந்த ராஜபக்‌ஷவே உள்ளார் எனவும் குற்றஞ்சாட்டியதுடன், தேர்தல் காலங்களில் நாட்டில் குழப்பங்களைத் தூண்டிவிட்டு, வாக்குச் சேகரிக்க இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.

அத்துடன், தொழிற்சங்கங்கள் இன்று சுதந்திரமாகத் தமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல சுதந்திரத்தை நாமே வழங்கியதாகவும் கடந்த ஆட்சியில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றால், அடுத்தநாள் அவர்களின் வீடுகளுக்கு வெள்ளை வான் வந்த வரலாறே காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தா​ர்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் ஓரிரு நாள்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, நாடாளுமன்றக் குழு ஆகிய இணைந்து, வெற்றிபெறும் வேட்பாளர் ஒருவரைத் தெரிவுசெய்யுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .