Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை- பாலையூற்று பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தினுள் திருடிய இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்சா முன்னிலையில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பித்தார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 20 மற்றும் 23 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது: கிறிஸ்தவ தேவாலயத்தின் பின்புறமாகவுள்ள கட்டடத்தினுள் குடும்பமாக வாழ்ந்து வரும் தேவாலயத்தில் கடமையாற்றும் பாதர் உடைய வீட்டின் கதவை உடைத்து வாயுசிலிண்டர், குக்கர் மற்றும் ஓட்டோவின் டயர்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டினையடுத்து திருகோணமலை தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்கள் இருவரையும் அவர்கள் திருடிய பொருள்களையும் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைத்ததையடுத்து கிறிஸ்தவ தேவாலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு கட்டளையிதுடன், இளைஞர்களின் ஒழுக்கம் தொடர்பிலும் முன் குற்றங்கள் காணப்படுகின்றதா என்பது பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பொலிசாரிடம் கட்டளையிட்டுள்ளார்.
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago