Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எப். முபாரக் / 2020 ஜனவரி 21 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில், பெண்கள் உதவி நிறுவனத்தின் ஏற்பாட்டில், தையல் பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், இந்நிறுவனத்தின் தலைவி எஸ்.நஸீமா தலைமையில் இன்று (21) நடைபெற்றது.
தேசிய விடுதலை மக்கள் முண்ணனி கட்சியின் ஒருக்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிண்ணியா மாதிரிக் கிராமத்தில் அமைந்திருக்கும் தையல் பயிற்சி நிலையத்தைப் பார்வையிட்டதுடன், மாதிரிக் கிராமத்தில் இயங்கி வரும் நெசவு நிலையத்தையும் பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் யுவதிகளின் தேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
இதன்போது, தேசிய விடுதலை மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் கலந்துகொண்டு, தையல் பயிற்சி, பெண்களின் தொழில் முயற்சி தொடர்பாகவும் கட்சியினூடாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .