Editorial / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை, தோப்பூர் பகுதியில் காணி தகராரொன்றில், தம்பியின் துப்பாக்கிச்சூட்டில் அண்ணன் காயமடைந்த நிலையில் நேற்று (08) இரவு தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர் தோப்பூர், அல்லை நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே. எம். இக்பால் (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தமது தந்தைக்குச் சொந்தமான காணியில் இரு பிள்ளைகளுடன் தமது அக்கா வாழ்ந்து வருவதாகவும் அவரை வீட்டை விட்டு எழும்புமாறு, தம்பியான அச்சு முகம்மது சலீம் கூறியதை அடுத்து, அவ்வாறு எழும்ப வேண்டாமெனத் தான் கூறியதாகவும் துப்பாக்கிச்சும் என தான் கூறியதாக, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனக்கும், தம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அடுத்து தம்பி தன்னைக் கட்டுத் துவக்காள் சுட்டதாகவும், வைத்தியசாலைப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காயமடைந்த இந்நபர், தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தை நடத்திய சந்தேகநபரை, பொலிஸார் கைது செய்யச் சென்ற போது, அவர் தப்பியோடியதாகவும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .