2025 மே 02, வெள்ளிக்கிழமை

தோப்பூரில் வெடிபொருள்கள் மீட்பு

தீஷான் அஹமட்   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர், சின்னக் கலுவான் பாலத்தின் கீழிருந்து இன்று (27) பிற்பகல் 1.30 மணியளவில் வெடிபொருள்கள்  சில மீட்கப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாலத்தின் கீழ் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், மேற்படி வெடிபொருள்களைக் கண்டு, அரச புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில், மூதூர் பொலிஸாரால் மேற்படி வெடிபொருள்கள் மீட்கப்பட்டன.

இதன்போது 02 கைக் குண்டுகள், ரி56 ரகத் துப்பாக்கி ரவைகள் 15 என்பன மீட்கப்பட்டுள்ளதாக, மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெடிபொருள்கள், நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .