2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தௌபீக் எம்.பியின் வீட்டின் மீது தாக்குதல்

Editorial   / 2021 நவம்பர் 23 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு பாதை  விபத்தில் மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொதித்தெழுந்த மக்கள்,   திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலால் வீட்டின் கதவு, யன்னல்கள் மற்றும் அவற்றின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாரிய படலையும் விழுத்தி சாய்க்கப்பட்டுள்ளன.

தாக்குதல்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X