Niroshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
சமாதானம், சகவாழ்வு, பல்வகைத்துவம்;, ஏனைய சமயங்களையும் சமூகங்களையும் மதித்தல் மற்றும் விழுமியங்களைக் கடைப்பிடித்தல் போன்ற விடயங்களை இளைஞர், யுவதிகளிடம் ஏற்படுத்தும் பொருட்டு கிராமியப் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பினால் 'தேசிய குறும் திரைப்பட விழா' போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆக்கங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரிகள் 18 - 25 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
இதற்கு முன் குறும் திரைப்பட ஆக்கங்களில் அனுபவம் உள்ளவர்கள் பற்றியும் அதற்கான விருதுகளோ சான்றிதழ்களோ பெற்றவர்கள் பற்றியும் விசேட கவனம் செலுத்தப்படும்.
இதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு முன் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்களிலிருந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமான 30 இளைஞர், யுவதிகள் தெரிவு செய்யப்படுவர். இவர்களுக்கு முதலில் 5 நாட்கள் குறும்திரைப்பட தயாரிப்பு பற்றிய பயிற்சி நெறியொன்று வழங்கப்படும்.
இதற்குப் பின் அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் பங்குபற்றுனர்கள் தங்களால் ஆக்கப்பட்ட குறும் திரைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவற்றில் மிகச் சிறந்த மூன்று குறும்திரைப்படங்களுக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்படும்.
அத்தோடு மேலும் ஏழு குறும்திரைப்படங்கள் குறும்திரைப்;பட விழா தினத்தில் காட்சிப்படுத்தப்படுவதோடு பத்து குறும்திரைப்படங்கள் தொலைக்காட்சியிலும் இலவசமாக ஒளிபரப்புவதற்கான ஆவண செய்து தரப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் முகவரிக்கு பூரணப்படுத்தப்பட்ட தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.
கிரமியப் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு
481, பிரதான வீதி,
கந்தளாய்.
மேலதிக விாரங்களுக்கு 077-7073441 அல்லது 071-6924269 எனும் கையடக்கதொலைபேசி இலக்கத்ததுடன் தொடர்பு கொள்ள முடியும்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026