Niroshini / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
திருகோணமலை,தோப்பூர் பிரதேசத்தில் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மூதூர் மின்சார சபை அதிகாரிகளிடமும் தோப்பூர் உப மின் பாவனையாளர் அதிகாரிகளிடமும் முறையிட்டமைக்கு அமைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் திருத்த வேலைகள் இடம்பெற்றன.
இருப்பினும், திருத்த வேலை இடம்பெற்ற மறு தினத்திலிருந்து மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மூதூர் மின்சார சபை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தோப்பூர் பிரதேசத்தில் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை.மாறாக மூதூர் பிரதேசத்திலும் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
ஏதோ ஒரு இடத்தில் பிழை காணப்படுகின்றது. அதை மிக விரைவில் இனங்கண்டு திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago