Suganthini Ratnam / 2016 நவம்பர் 27 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
திருக்கோணேஸ்வரர் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களை இந்துமத ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்குமாறு அக்கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இக்கோவிலுக்கு வருகை தருவோரை கலாசார ஆடைகளை அணிந்து வருமாறும் பூஜை வேளைகளில்; கோவிலினுள்ளே அலைபேசிப் பாவனையைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள நிர்வாகம், கலாசாரம் அல்லாத ஆடைகளுடன் வருகை தருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்தது.
அனைத்து மதத்தவர்களுக்கும் இக்கோவிலுக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கோவில் ஒழுங்கு விதிக்கு அமைய வழிபாட்டை மேற்கொள்ளுமாறும் கோவில் நிர்வாகத்தினருடம் ஒத்துழைக்குமாறும் அந்நிர்வாகிகள்; கேட்டுக்கொண்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இக்கோவிலுக்கு அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago