Suganthini Ratnam / 2017 மார்ச் 01 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம், கே.எல்.ரி.யுதாஜித், அப்துல்சலாம் யாசீம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள நிர்வாகக் கட்டடத்தினுள் விரிவுரையாளர்களும் நிர்வாக உத்தியோகத்தர்களும்; மாணவர்களால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அவ்வளாகத்தில் இன்று (01) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 2016.03.08 அன்று மேற்படி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து 9 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டில் இறுதியாக நடைபெற்ற பரீட்சைக்குத் தோற்றியிருந்த இந்த 9 மாணவர்களின் பரீட்சை முடிவுகள், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வெளியான பரீட்சை முடிவுகளில் காணப்படவில்லை என்பதைக் கண்டித்தே விரிவுரையாளர்களையும் நிர்வாக உத்தியோகத்தர்களையும் மாணவர் குழுவினர் தடுத்துவைத்து 6 மணித்தியாலங்களின் பின்னர் விடுவித்தனர்.
செவ்வாய் மாலை 4 மணி முதல் இரவு 10.30 மணிவரை இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து தங்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு விரிவுரையாளர்களும் நிர்வாக உத்தியோகத்தர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விரிவுரையாளர்களும் நிர்வாக உத்தியோகத்தர்களும் ஆராய்ந்ததுடன், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு வளாக நிர்வாகத்திடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.
இதேவேளை, வளாக நிர்வாகத்துக்கும்; மாணவர்; பிரதிநிதிகளுக்கு இடையிலும் நடைபெற்ற கூட்டத்தின்போது, வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கான வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியுள்ளனர். இது தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக வளாக முதல்வர் ஏ.கனகசிங்கம் தெரிவித்தார்.
11 minute ago
19 minute ago
22 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
22 minute ago
24 minute ago