Niroshini / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை திங்கட்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
சேருநுவர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், இப்பிரதேசத்தில் இரும்புகள் திருடி விற்பனை செய்வது, வீடுகளில் யாருமில்லாத சந்தர்ப்பத்தில் வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களை திருடுவது மற்றும் விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்களில் தொடர்புடையவராவார்.
குறித்த சந்தேக நபருக்கெதிராக மூதூர் நீதிமன்றில் திருட்டு வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இத்திருட்டு சம்பவங்களில் வேறு யாரும் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்களா போன்ற விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
17 minute ago
22 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
22 minute ago
50 minute ago