2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

திருமண வீட்டில் கைகலப்பு; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, இந்திகட்டுவௌப் பிரதேசத்தில் திருமண வீடு ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களான இந்திக்கட்டுவௌப் பிரதேசத்தைச் சேர்ந்த  ஏ.சுஜித் உபமானந்த (வயது 37), பீ.நளீன் பிரசன்ன (வயது 31),  என்.டபிள்யூ.எஸ்.குமார (வயது 29) ஆகியோரே இதில் காயமடைந்துள்ளனர்.

கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் திருமண வீடு ஒன்றுக்குச் தான் சென்றதாகவும் அதன்போது, மதுபானம் அருந்திவிட்டு மற்றைய குழுவிலுள்ள ஒருவர் தன்னைத் தாக்கியதாக சக நண்பர்களிடம் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கூறியுள்ளார்.

நேற்றுப் புதன்கிழமை (11) இரவு நடைபெற்ற மற்றுமொரு திருமண வீட்டில் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தபோதே, மேற்படி நபர் இதனைக் கூறியுள்ளார். இதனை அடுத்து இவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .