2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

திருமண வீட்டில் தாக்குதல்; முன்னாள் இராணுவ வீரர் காயம்

Suganthini Ratnam   / 2016 மே 10 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, கல்கடவெலப் பகுதியில் திருமண வீடு ஒன்றில்; திங்கட்கிழமை (09) இடம்பெற்ற தாக்குதல்ச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கடவெலப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான கே.சீலரத்ண (வயது 53) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

இவர் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்திவிட்டு பகல் உணவை உட்கொள்வதற்காக தனது கணவர் சென்றபோது, பழைய கோபத்தையிட்டு பீங்கானால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் இவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இந்தத் திருமண வீட்டில் இரண்டு குழுவினர்களாக இருந்து உரையாடிக்கொண்டிருந்ததாகவும் இதன்போது, அது முறுகலாக மாறியதாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .